கதிர்காமத்தில் பிரதமர் தரிசனம்!


கதிர்காமம் கிரிவெஹரவிற்கு விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நேற்று பிற்பகல் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டார்.

ருஹூணு மாகம் பத்துவே தலைமை சங்கநாயக்கர் கிரிவெஹர விகாராதிபதி தம்மிந்த தேரரிடம் நலன் விசாரித்த பிரதமர், அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து பிரதமர் மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்டோர் கிரிவெஹர வழிபாட்டில் ஈடுபட்டனர்.

கொபவக தம்மிந்த தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர், கிரிவெஹரவில் பிரித் பாராயணம் செய்து பிரதமரை ஆசீர்வதித்தனர்.

பிரதமருடனான சமய வழிபாட்டில் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, ருஹூணு மஹா கதிர்காம ஆலயத்தின் பஸ்னாஹிர நிலமே டிஷான் விக்ரமரத்ன குணசேகர, முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் விமல் கலகம ஆராச்சி, கதிர்காமம் பிரதேச சபையின் தலைவர் சானக அமில் ரங்கன உள்ளிட்ட பிரதேச அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதியது பழையவை