யாழ் மாவட்டம் கரந்தன் – ஊரெழு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள்-ஹன்ரர் வாகனம் மோதியதில் இரண்டு பெண்கள் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று 10-07-2021ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
ஞானவைரவர் வீதி ஒழுங்கை ஊடாக மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது கரந்தன் -ஊரெழு பிரதான வீதியில் திடீரென ஏறியபோது எதிரே வந்த ஹன்ரர் வாகனத்தில் மோதியதால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கீழேவிழுந்துள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிள் ஹன்ரர் வாகனத்தின் பவரில் கொழுவியதால் இழுத்துச் சென்று அருகில் உள்ள வீட்டின் மதிலை உடைத்து பாய்ந்து விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று பெண்களில் ஒரு பெண் 8 மாத கர்ப்பிணிப் பெண் என்பதுடன் 2 வயது சிறுமியும் பயணித்துள்ளனர். காயமடைந்த இரண்டு பெண்கள் உடனடியாக அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் 2 வயது சிறுமி காயங்களின்றி தப்பியுள்ளனர்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.