வவுனியா மடுகந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குள பகுதியில், காயமடைந்த நிலையில், உயிரிழந்த காட்டு யானை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிராமத்தில் வேட்டைக்கு சென்றவர்கள் பயன்படுத்திய, வெங்காய வெடி வெடித்ததனாலேயே யானை இறந்துள்ளதாக, பிரேத பரிசோதனை மேற்கொண்ட, வடக்கு மாகாண கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பி.கிரிதரன் குறிப்பிட்டுள்ளார்.
5 வயது மதிக்கத்தக்க யானை உயிரிழந்துள்ளது.
எனினும், இந்த விடயம் தொடர்பில், வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் வன பாதுகாப்புத் துறையினரும் ஆராய்ந்து வருகின்றனர்.
