இலங்கையில் சைனோபார்ம் தடுப்பூசி இரண்டையும் பெற்றிருந்த ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 73 வயதைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் மே 29ஆம் திகதி முதலாவது சைனோபார்ம் தடுப்பூசியும், ஜுன் 28ஆம் திகதி இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றிருந்தார்.
அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனத்தை அடுத்து கராப்பிடடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உய்ரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
