சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிராக போராட்டம்!


பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் இன்று(22) இடம்பெற்றது.

போராட்டம் ஏ9 வீதியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.

சிறுவர் மற்றம் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்த கோரியும், குற்றவாளிகளை பாதுகாக்காது அவர்களிற்கு தண்டனை வழங்க கோரியும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்கள் எழுப்பினர்.

இதேவேளை நீதிமன்ற சாட்சியங்களை அச்சுறுத்த வேண்டாம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

சுமார் 30 நிமிடங்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்க்கது.

புதியது பழையவை