ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறும் 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிக்பிக் போட்டிகளில் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச ஜப்பான் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக்கொள்ளும் இலங்கை வீர, வீராங்கனைகளை ஊக்கப்படுத்தவும், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அதிகாரிகளை சந்திக்கவும் ஜப்பானிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் எண்ணியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

