மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதியர்கள் போராட்டம்

நாடளாவிய ரீதியில் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று(28) நண்பகல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதியினால் தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட தாதிய பதவி நிலை மற்றும் ஏனைய நலன் தொடர்பான சுற்று நிரூபம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட நிலையிலும் இதுவரையில் சுற்று நிரூபங்களாக வெளியடப்படாத நிலையில் அவற்றினை வெளியிடுமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் ஒரு மணி நேர பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தாதியர்கள் பல்வேறு சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரச தாதியர் சங்கத்தின் தலைவர் தலைமையில் இந்த போராட்டம் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதாக நடைபெற்றது.
கொரோனா வாட்டுகளுக்கு வழங்க ஒப்புக்கொண்ட வசதிகள் எங்கே?,வருடத்தில் 05நாட்கள் தொடர்பான ஆணைக்குழுவினை நியமி,பதவி உயர்வு சுற்று நிரூபத்தினை விரைவாக வெளியிடு,பதவி நிலை சுற்று நிரூபம் எங்கே?,உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

பொதுமக்களின் சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.




புதியது பழையவை