கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள 4 வைத்தியசாலைகளில் இயங்கும் கொரொணா அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு ஒட்சிசனுடன் கூடிய சிலிண்டர்கள் ரெகுலேட்டர்கள் வழங்கப்பட்டன.
பத்தொன்பது லெட்சத்து ஒன்பதினாயிரம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்களை அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு வழங்கியுள்ளது.
இந்நிகழ்வுகள் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரன் அவர்களின் வழிகாட்டலில் இன்று கல்முனை பிராந்திய சுகாதார பணிமணை கேட்போர் கூடத்தில் பிராந்தியப் சுகாதாரப் பணிப்பாளர் ஜீ.சுகுணன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் மற்றும் பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள 20 கொவிட் வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கொவிட் தொற்றிற்குள்ளானவர்களின் நலன் கருதி அமெரிக்க யூத உலக சேவை நிறுவனத்தின் நிதி அனுசரணையுடனும் கிழக்கு மாகாண பங்காளர் அமைப்புக்களின் உதவிகளுடனும் 7.7 மில்லியன் பெறுமதி கொண்ட ஒட்சிசனுடன் கூடிய சிலிண்டர்களையும் றெகுலேற்றர்களையும் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.