மின்சாரம் தாக்கி குடும்ப பெண் மரணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில், தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை, மின்சாரம் தாக்கியதில், இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார்.

29 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தாயே, உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம், புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

விவசாய தொழிலையே நம்வி வாழ்ந்து வரும் இந்த குடும்பத்தில், விவசாய நடவடிக்கையின் போது ஏற்பட்ட மின்சார கசிவு காரணமாக, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
புதியது பழையவை