மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் குறித்த காலப்பகுதியில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இடம்பெறாது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக கடந்த புதன் கிழமை முதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் கொவிட் பரவலை கட்டுப்படுத்தம் விதமாக இந்த சேவைகளை மீண்டும் இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.#S
புதியது பழையவை