கோவிட் பரவல் குறையாதது ஏன்? உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி விளக்கம்

டெல்டா வகை வைரஸ் மற்றும் மெதுவாக தடுப்பூசி போடுவதால், சர்வதேச அளவில் கோவிட் பரவல் குறையவில்லை என உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் 5ல் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்காவில் மரணமடைபவர்களின் விகிதம், கடந்த இரண்டு வாரங்களில் 30ல் இருந்து 40 சதவீதம் அதிகரித்து உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், தொற்று பரவல் வேகம் குறையவில்லை.

உலகளவில் கோவிட் பரவல் இன்னும் குறையவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார். உலக நாடுகளை 6 மண்டலங்களாக உலக சுகாதார அமைப்பு பிரித்துள்ளது. அதில் 5 மண்டலங்களில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்க மண்டலத்தில் கோவிட் தொற்றால் இறப்பவர்களின் விகிதம், 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார். கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் 5 லட்சம் பேருக்கு தொற்று உறுதியானது 9300 பேர் இறந்தனர் எனவும் அவர் கூறினார். டெல்டா வைரஸ் வேகமாக பரவுவதுதான் தொற்று அதிகரிக்க முக்கிய காரணம்  தடுப்பூசி போடும் பணிகள் துரித கதியில் நடக்காதது.ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தது போன்ற காரணங்களாலும் கோவிட் பாதிப்பு குறையாமல் இருக்கிறது என விஞ்ஞானி
டெல்டா வகை வைரஸ், மக்கள் கூடுதல், ஊரடங்கில் தளர்வு, தடுப்பூசி போடுவது அதிகரிக்கவில்லை. இதனால், பரவல் அதிகரிக்கிறது. 

முதலில் தோன்றிய வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் 3 பேருக்கு தொற்று ஏற்படும். அதுவே, டெல்டா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் மூலம் 8 பேருக்கு பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதியது பழையவை