வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகி உள்ள செய்தி


16 நாடுகளில் தொழில்புரிந்த 124 புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரன்தெனிய இந்த தகவலை தெரிவித்தார்.

எனினும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உயிரிழந்தவர்களுக்காக அவர்களின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்படும் மரண சடங்குகளுக்காக தலா 40,000 ரூபா கொடுப்பனவும், இந்த குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா நட்டஈடும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, வௌிநாடுகளில் தொழில்புரியும் 4,500-க்கு மேற்பட்ட இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, வௌிநாடுகளில் தொழில்புரியும் 27,000 இலங்கையர்கள் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.
புதியது பழையவை