ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி


இலங்கையில் அடுத்தவாரம் முதல் சகல பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதாரத் துறை தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலைகளை திறப்பதற்கு முன்பு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்குவது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுமார் 245,000 ஆசிரியர்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்து ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் விரைவுபடுத்தப்படவுள்ளன.

அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதுத் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.
புதியது பழையவை