பசில் அமைச்சரானதுக்கு பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் வெடிக்கொழுத்தி கொண்டாடியது

பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டமையினைதொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பட்டாசு கொழுத்தப்பட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு கொழுத்தப்பட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகர் பகுதியிலும், பட்டிருப்பு தொகுதியிலும், செங்கலடியிலும் இன்று (08)அமைச்சர் பசீல் ராஜபக்ஸவின் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, பட்டாசு கொழுத்தி பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடந்த காலத்தில் வடக்கு கிழக்கிற்கு தனித்தனி அலகுகளை உருவாக்கி பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீண்டும் அமைச்சராக வந்துள்ளதனால் தமிழ் மக்களுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.


புதியது பழையவை