கொழும்பில் பெரும் பரபரப்பு-ஊடகவியலாளர் ஒருவரது கமரா மீது பொலிஸ் அதிகாரி தாக்குதல்


நாடாளுமன்றத்திற்கு அருகே இன்று 08-07-2021 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஊடகவியலாளர் ஒருவரது கமரா மீது பொலிஸ் பெண் அதிகாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் போராட்டத்தில் பௌத்த பிக்குகள் இருவர் உட்பட 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொத்தலாவலை தேசிய பாதுகாப்பது பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிலையிலேயே அவர்கள் கைதாகியுள்ளனர்.

கைதானவர்களை பொலிஸ் பஸ் வண்டிகளில் ஏற்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களும் முயற்சித்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் காணொளி பதிவுசெய்துகொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரது கமரா மீது பெண் அதிகாரி தாக்குதல் நடத்தினார்.

இதுவிடயம் குறித்து அங்கிருந்த உயர்பொலிஸ் அதிகாரிகளிடம் ஊடகவியலாளர்கள் முறையிட்டபோதும் அவர்கள் அதனை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது


புதியது பழையவை