நுவரெலியா ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில், பதிவாளருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஹட்டன் நீதிவான் நீதிமன்றம், இன்று மூடப்பட்டுள்ளதாக, பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் பதிவாளராக பணிபுரிந்து வந்த நபர், கடந்த 22 ஆம் திகதியில் இருந்து, சுகயீனம் காரணமாக பணிக்கு சமுகம் அளிக்காத நிலையில், பதிவாளரின் வீட்டுக்கு சென்று, பி.சீ.ஆர் பரீசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, பதிவாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக, பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் காரணமாக, இன்றைய தினத்திற்கான நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் பிற்போடபட்டதுடன், ஹட்டன் நீதிமன்ற வாளாகம் முழுவதும், கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, நாளை மீண்டும் வழமைபோல் இயங்கும் மென அறிவிக்கப்பட்டுள்ளது.
