சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசியானது, டெல்டா மாறுபாட்டை எதிர்த்து சிறப்பாக செயற்படுவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது என்றும் உள்ளூர் ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான ஆய்வின் அறிக்கைகள் இந்த வாரத்தின் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமனவினால் இந்த அறிவிப்பு வெளியிவந்துள்ளது.
சினோபார்ம் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு டெல்டா மாறுபாட்டினால் சிறப்பு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.