முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகளுக்கு கராத்தே பயிற்சியுடனான தரப்படுத்தல் மற்றும் பட்டி வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டுப் பிரிவினர் ஆதரவுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் மாணவர்களுக்கு தரங்கணித்து தர சான்றிதழ் பட்டிகளுடனான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர், பிரதி கல்விப் பணிப்பாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்டத்தின் இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லை நகர கள்ளப்பாடு உணாப்பிலவு, செல்வபுரம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவீர வீராங்கனைகள், சிறார்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.


