புனர்நிர்மாணம் செய்யப்படுகின்ற மட்டக்களப்பு பாலமீன்மடு கிராமிய வைத்தியசாலையினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் 1996 ஆண்டு கட்டப்பட்டு இயங்கி வரும் பழைமையான கிராமிய வைத்தியசாலையினை புனரமைப்பு செய்து தருமாறு அப்பிரதேச மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய கிழக்குமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் 4.2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்படுகிறது
புனரமைப்பு செய்யப்படுகின்ற வைத்தியசாலையினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன்,பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அச்சுதன்,மாவட்ட திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.சசிகுமார் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர்