15 வயது சிறுமி துஷ்பிரயோகத்துடன் சம்பந்தப்பட்டுள்ள பிரபல பௌத்த பிக்கு


கல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிரபல பௌத்த பிக்கு ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த பிக்கு அதிகளவில் பணத்தை கொடுத்து அந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இந்த சிறுமிக்காக பெருந்தொகை பணத்தை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களில் விசேட மருத்துவ நிபுணர், பிரதேச சபை ஒன்றின் தலைவர், சில பொலிஸ் அதிகாரிகள், பாடகர், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக மக்கள் பிரதிநிதி ஒருவரும் கைது செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.
புதியது பழையவை