காயங்களுடன் பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு


வவுனியா- தோணிக்கல் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் தோணிக்கல், லக்சபான வீதி பகுதியை சேர்ந்த உதயசந்திரன் சஞ்சீவ் (வயது 15) என்ற விபுலானந்த கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் நேற்று இரவு, தனது பெற்றோருடன் வீட்டில் இருந்தநிலையில் இன்று காலை, மகனை தூக்கத்திலிருந்து எழுப்புவதற்காக அவரது பெற்றோர் படுக்கையினை பார்த்தப்போது, மகனை காணவில்லை.
அதன்பின்னர் மகனை தேடியப்போது, வீட்டின் வெளிப்பகுதியில் காயங்களுடன் சடலமாக கிடப்பதனை அவர்கள் கண்டுள்ளனர்.

மேலும்  சம்பவம் தொடர்பாக அறிந்து அவ்விடத்திற்கு வருகைதந்த தடயவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை