மலையகத்தில் உள்ள அரசியல்வாதிகள, கட்சிபேதமின்றி தமது பிரச்சினையை நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்படுகிறது. நேற்றுக் காலை இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதில் இருந்து பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 18 கிலோ தேயிலை கொழுந்தினை பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் வலியுறுத்தி வந்தபோதிலும், 13 கிலோ மாத்திரமே பறிக்க முடியுமென கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால். வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் தொழில் வழங்கமுடியுமென நிர்வாகம் அறித்துள்ளதை அடுத்து, இந்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடியினால் தாம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதோ, தமது பிரச்சினை தொடர்பில் மலையக அரசியல்வாதிகள்