இலங்கை நாடாளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

‘எரிபொருள் விலையை உயர்த்திய கமன்பிலவை வெளியேற்றுவோம். நிவாரணத்தை குறைத்து நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்’

 எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில், ஆர்ப்பாட்டமொன்று, நாடாளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில் இன்று (19) காலை முன்னெடுக்கப்பட்டது.
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமயில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

எரிபொருள் விலையை அரசாங்கம் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இதன்போது கோஷமெழுப்பினர்.
புதியது பழையவை