பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதாரப்பணிமனையினால் பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்பட்டது.

தரம்-6இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கருப்பைகழுத்து புற்றுநோயைத் தடுப்பதற்கான தடுப்பூசி மற்றும் தரம் 07 இல் கற்கும் மாணவர்களுக்கான ஏற்பூசி ஏற்றும் பணிகள் பிரதேச பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் எஸ்.இராஜேந்திரன் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் 70 மாணவர்களுக்கு இன்றைய தினம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

தடுப்பூசி செலுத்தும் பணியில் பிரதேச பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களான எஸ்.கணேஷன், எஸ்.ஜீவிதன் ஆகியோர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை