மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் பணியினை முனைப்பு ஸ்ரீலங்கா நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்றது.
முனைப்பு சுவிஸ் நிறுவனத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் உலருணவு நிவாரணப்பணியானது முனைப்பு ஸ்ரீலங்கா நிறுவனத் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் நேற்று பட்டிப்பளை,மண்முனை வடக்கு,களுவாஞ்சிகுடி,செங்கலடி மண்முனைப் பற்று பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்டது.
இன்று செங்கலடி,வாழைச்சேனை, வாகரை பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்டது.