தொடர்ச்சியாக பதிவாகும் கோவிட் மரணங்கள்



யாழ். குடாநாட்டில் கடந்த ஒரு வாரத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்க முடிந்த போதிலும் உயிரழப்புகள் தொடர்ச்சியாக பதிவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஜூலை மாதம் முதலாம் திகதி 4 மரணங்களும், ஜூலை மாதம் இரண்டாம் திகதி 2 மரணங்களும், ஜூலை மாதம் நான்காம் திகதி ஒரு மரணமும், ஜூலை மாதம் ஐந்தாம் திகதி ஒரு மரணமும், ஜூலை மாதம் ஆறாம் திகதி 3 மரணங்களும், ஜூலை மாதம் ஏழாம் திகதி ஒரு மரணமும் என 12 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் யாழ். மாவட்டத்தில் கடந்த ஏழாம் திகதி வரையில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் இதுவரை ஏற்பட்ட கோவிட் மரணங்கள் (பிரதேச செயலர் பிரிவு வாரியாக)

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் - 33 பேர்,

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 12 பேர்,

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் - 12 பேர்,

உடுவில் பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர்,

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 08 பேர்,

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் - 08 பேர்,

சங்கானை பிரதேச செயலர் பிரிவில் - 08 பேர்,

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் - 05 பேர்,

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்,

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்,

வேலணை பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்,

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் - 02 பேர்,

ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் - ஒருவர் ஆகும்.
புதியது பழையவை