இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சர் வீட்டில் இருந்தாரா? என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு இருந்தது.
அந்த வகையில் மரணமடைந்தவர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி எம் கமலதாஸ் என்பவர் அவரது முகநூல் பக்கத்தில் கொலைச் சம்பவம் இடம்பெற்ற பொழுது இராஜாங்க அமைச்சர் சரியாக 5. 59 மணி அளவில் மட்டக்களப்பிலிருந்து புறப்பட்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.