பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹன, குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று 08-07-2021 ஆம் திகதி தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பத்தரமுல்லையிலுள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொதுசுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக இந்நிகழ்வு இடம் பெற்றது.