கண்டி- குருநாகலை வீதியில் கனரக வாகனங்கள் போக்குவரத்து நடவடிக்கையினை முன்னெடுப்பதனை தவிர்த்து செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று இரவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி – குருநாகலை வீதியின் கட்டுகஸ்தோட்டை சந்தியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஐந்து மாடிக் கட்டிடமொன்று தாழிறங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையிலே, குறித்த வீதியில் கனரக வாகனங்கள் போக்குவரத்து நடவடிக்கையினை தவிர்த்து செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த கட்டிடம் தாழிறங்கியமை காரணமாக எந்தவொரு உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.