கட்டுநாயக்க பிரதேசத்தில் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் ஆறுடனும் போலிய நாணயத்தாள்களை அச்சடிக்கும் இயந்திரத்துடன் நபரொருவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய சேதுவத்த பிரதேசத்தைச் சேரந்த் நபரொருவருவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்றைய தினம் கட்டுநாயக்க பகுதியிலுள்ள ஒரு வியாபார நிலையத்திலிருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 1,000 ரூபாய் போலி நாணயத்தளை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வியாபார நிலைய உரிமையாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து உரிமையாளர் இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்தியபோது அவரிடமிருந்து ஆயிரம் போலி நாணயத்தாள்கள் ஆறும் போலி நாணயத்தாள்களை அச்சடிக்கும் இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
