நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் விழா


முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் விழா, நாளை இடம்பெறவுள்ள நிலையில், 10 பேர் மாத்திரம் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிகாலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து, மடப்பண்டம் எடுத்துச் செல்லப்பட்டு, பொங்கல் விழா, நாளை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், பொங்கல் விழாவை மேற்கொள்ள, கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ளது.
புதியது பழையவை