மட்டு-மாமாங்கம் கிராமத்திற்கு இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விஜயம்

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவினை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட மட்டக்களப்பு மாமாங்கம் பொதுசுகாதார பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் இனம்காணப்பட்டதை தொடர்ந்து மாமாங்கம் கிராமம் இன்றுடன் 19 நாட்களாக தொடர்ந்து தெனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடச்சியான ரபிட் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவினை இராஜாங்க அமைச்சர் எஸ் . வியாழேந்திரன் இன்று(12) நேரில் சென்று பார்வையிட்டார்.

புதியது பழையவை