அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நேற்று (26) மாலை பிற்பகல் பலத்த காற்றுடனான மழை பெய்தமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. பலத்த காற்று வீசியதனால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த தொலைத் தொடர்பு கோபுரம் ஒன்றும் முறிந்து வீழ்ந்துள்ளது.
அக்கரைப்பற்று அல்-பாத்திமிய்யா வித்தியாலயத்துக்கு அண்மையில் அமையப் பெற்ற இத்தொலைத் தொடர்பு கோபுரம் பலத்த காற்றின் காரணமாக முறிந்து வீழ்ந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கோபுரம் வீழ்ந்தமையால், சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் உடைமைகள் சிலவற்றுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் மின்கம்பங்களும் சேதமடைந்ததால் மின் இணைப்புகளும் சில இடங்களில் துண்டிக்கப்பட்டன.



