சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (31) முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளதாவது, “துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினிக்கு நீதி கிடைப்பதற்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கமும் விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மேலும் எதிர்வரும் காலங்களில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் முறையான சட்டத்தினை அரசாங்கம் கொண்டுவர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.


