சௌபாக்கிய உற்பத்தி கிராமம் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், கிளிநொச்சி பிரமந்தனாறு கிராமத்தின் உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு, நேற்று(06) பிற்பகல் 3.00 மணியளவில், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதம அதிதியாக பங்கேற்று, திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
சௌபாக்கியா கிராமம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு, நிலக்கடலை விதைகளும் பயிரிடப்பட்டன.
சௌபாக்கியா திட்டத்தின் கீழ், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 240 பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.