போரதீவுப்பற்றில் சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள்





மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றில் சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மின்சாரவசதியற்றகுடும்பங்களுக்குமின் இணைப்புவழங்குதல்,உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குதல்,சமுர்த்தி லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் அமைக்கப்பட்ட வீடுகள்பயனாளிகளுக்கு கையளித்தல்,சேதனைப்பசளை ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது போராதீவுப்பற்றபிரதேசத்தில் மின் வசதியற்ற 24 குடும்பங்களுக்குமின் இணைப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன்,உயர்தரத்தில் கல்விகற்கும் 273 மாணவர்களுக்கு சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவும் வழங்கப்பட்டன.

மேலும் சமுர்த்தி லொத்தர் சீட்டிழுப்பு மூலம் அமைக்கப்பட்டநான்கு(4) விசேடவீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டதுடன் 44 பேருக்குஅரணலுகடனும் ஐந்து(5)பேருக்குசேதனைப்பசளையும் வழங்கிவைக்ப்பட்டன.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்குவேலைத்திட்டத்திற்கமைய இம் முறை இரசாயணப்பசளைமற்றும் இரசாயணகிருமிநாசினிகள் அற்றநஞ்சற்றநாடுஎனும் தொனிப்பொருளில் விவசாயம்,பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் சேதனைப்பசளைதயாரிப்பு,பாவனைமுறை தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதியது பழையவை