பொதுஜன பெரமுன கட்சியை வளர்த்தெடுப்பதில் பாரிய பங்கு பசில் ராஜபக்சவுக்கு உள்ளது- நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான்

அரசாங்கத்தினுடைய புதிய கொள்கையை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தினால் அதுவே பாரிய வெற்றி என நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கு வீடு "கப்ருக" 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(10) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
பொதுஜன பெரமுன கட்சியை வளர்த்தெடுப்பதில் பாரிய பங்கு பசில் ராஜபக்சவுக்கு உள்ளது.

இந்த நாட்டை ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் அவரது வருகை காணப்படுகின்றது.
அவருடைய ஆற்றலையும் அறிவையும் பயன்படுத்தி அடுத்தடுத்த வருடங்களில் பாரிய மாற்றத்தைக் காணக்கூடியதாக இருக்கும் என்பதை கூற முடியும்.

ஜனாதிபதியின் வேலைத்திட்டம் தற்போது இந்த வருடத்துக்குள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மற்றும் அரசாங்கத்தின் நோக்கமே உள்நாட்டுப் பொருளாதாரத்தை விருத்தி அடையச் செய்வதுதான்.

ஆகவே நாங்கள் அதற்கு அவர்களோடு சேர்ந்து பயணிக்க வேண்டும். சில ஊடக நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்றாற்போல் செயல்படுவதால் தான் இன்று இவ்வளவு பிரச்சினைக்கு காரணமாக இருக்கின்றது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


புதியது பழையவை