இரண்டு மாதங்களுக்கு பின் காத்தான் குடி பள்ளிவாயல்களில் தொழுகைகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த வணக்கத்தலங்களை இன்று 10.07.2021 சனிக்கிழமை திறப்பதற்கான அனுமதியை சுகாதார அமைச்சின் பணிப்பாளரினால் வழங்கப்பட்டதையடுத்து சுகாதார வழிமுறைகளைப் பேணி பள்ளிவாயல்களை திறப்பதற்கான அனுமதியினை முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை பின் பற்றி பள்ளிவாயல்களை திறக்கலாம் என முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ. எம். அஷ்ரப் அவர்களினால் அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று(10) சனிக்கிழமை பள்ளிவாயல்கள் திறக்கப்பட்டு தொழுகைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.

காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் சமூக இடைவெளியைப் பேணி தொழுகைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் காத்தான்குடியில் முடக்கப்பட்டுள்ள மூன்று கிராம சேகர் பிரிவுகள் தவிர்ந்த காத்தான்குடியிலுள்ள ஏனைய அனைத்து பள்ளிவாயல்களையும் திறந்து தொழுகையில் ஈடுபட காத்தான்குடி நகருக்கான கொவிட் தடுப்பு செயலணி அனுமதி வழங்கியது.


புதியது பழையவை