மட்டக்களப்பில் கொடியேற்றம் இல்லாமல் வரலாற்று சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆரம்பம்


இராம பிரானால் வழிபாடுசெய்யப்பட்டதாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை வருடாந்த மஹோற்சவம் நேற்று 30-07-2021ஆம் திகதி ஆரம்பமானது.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக மாவட்ட கொவிட் செயலணியின் தீர்மானத்திற்கு அமைவாக இம்முறை கொடியேற்றம் செய்யாமல் பக்தர்களின் பங்களிப்பின் அபிசேக ஆராதனைகளுடன் வருடாந்த மஹோற்சவம் நடைபெறுவருகின்றது.

மூர்த்தி,தீர்த்தம்,தலம் ஆகியவற்றினைக்கொண்ட இந்த வரலாற்றுசிறப்புமிக்க ஆலயத்தின் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தோற்சவம் சிறப்புபெறுகின்றது.

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட யாக பூஜை,மூலமூர்த்திக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து விசேட பூஜைகளை தொடர்ந்து வசந்தமண்டபத்தில் எழுந்தருளியுள்ள மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி உள்வீதியுலா நடைபெற்றது.
எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் உபயகாரர்களை மட்டுமே கொண்டு உற்சவங்களை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர் உற்சவம் நடைபெறாது என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ள நிலையில் எதிர்வரும் 08ஆம்திகதி முக்கியத்துவம் வாய்ந்த ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் நடைபெறுகின்றபோதிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.


புதியது பழையவை