திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை இன்று காலை கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-மட்கோ,மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஏ.துலாஜ் மதுசங்க எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் சென்ற மோட்டார் சைக்கிள் உற்பட அவரிடம் இருந்த 14 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


