6 நாட்களில் பதிவாகிய 1000 கோவிட் மரணங்கள்


நாட்டில், கடந்த 6 நாட்களில் 1000 கோவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரகாலமாக 100க்கும் அதிகமான கோவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கிடையில், பொது மக்கள் கோவிட் தடுப்பூசிகளை தேர்ந்தெடுத்து செலுத்திக்கொள்ளாமல், தமக்கு கிடைக்கும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பதிவாகும் கோவிட் மரணங்களில் 80சதவீதமானோர் 60வயதுக்கு மேற்பட்டவர்கள் என அவர் தெரிவித்தார்.

அத்துடன், இவ்வாறு உயிரிழந்தவர்களில் 80சதவீதமானோர் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதியது பழையவை