கொவிட் தீவிரம் பெற்றுள்ளதன் காரணமாக முன்னெடுக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது நாளாகவும் முடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலல் உள்ள அனைதது வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இரண்டாவது நாளாகவும் மாவட்டம் முடங்கியுள்ள நிலையில் பொதுப்போக்குவரத்துகள் எதுவும் நடைபெறவில்லை.
அத்தியாவசிய சேவைகள் வழமைபோன்று நடைபெறுகின்ற அதேவேளை அவசிய தேவைகருதியவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர்,விசேட அதிரடிப்படையினர் விசேட பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருவதுடன் பொலிஸார் வீதி சோதனைகளை ஏற்படுத்தி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.