அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் முன்மொழிவிற்கமைய குறித்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ வசதிகள் தொடர்பில் அரசுக்கு ஏற்பட்டு செலவினங்களைக் கருத்திற்கொண்டு பிரதமரினால் இன்று (23)மாலை அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்டது.
இதன்போதே அமைச்சர்கள் அனைவரும் தமது ஒகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்குவற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.