வவுனியா- கனகராயன்குளம், ஆலங்குளம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து 7 வயது சிறுமி, சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த நிசாந்தி என்ற 7 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத வேளையில், அவர் அயல் வீட்டிற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் நீண்ட நேரமாகியும் சிறுமியை காணாதநிலையில் அயல் வீட்டார் தேடியுள்ளனர். இதன்போது அருகிலுள்ள கிணற்றில் சிறுமி விழுந்துள்ளமை கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆயினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
