நாட்டு மக்களின் பரிதாப நிலை


இலங்கையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இணையத்தள விற்பனை நிறுவனங்கள் ஒன்லைனில் விறகு மற்றும் விறகு அடுப்புக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி இலங்கையின் பிரபல்ய நிறுவனமொன்றில் 5 கிலோ கிராம் விறகுகள் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக  கூறப்படுகிறது.

அதே நேரத்தில் மண் அடுப்பொன்றும் 5 கிலோ கிராம் விறகுகளும் 390 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள நிறுவனம் ஒன்றின் தலைவர், விறகுகளை ஒன்லைனில் விற்பனை செய்வோம் என கற்பனைகூட செய்யவில்லை என்றும் இது உண்மையில் வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விறகு மூடைகளை தாம் விற்பனை செய்துள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
புதியது பழையவை