தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவி மரணம்


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் இன்று (18-08-2021)அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் கொழும்பு மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி,உப்போடையினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியாக நீண்டகாலமாக அரசியல்பணியாற்றிவந்தவராகும்.

தமிழ் மக்களின் மகளிர் அணியை கட்டியமைப்பதில் பாரிய பங்காற்றியவராகவும் இவர் இருந்துள்ளார்.

அவரது இறுதிச்சடங்கு தொடர்பான விபரங்கள் இன்னும் அறியக்கிடைக்கவில்லை.
புதியது பழையவை