இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய துறையாக மீன்பிடி துறையை மாற்ற விரும்புவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இதற்கான திட்டம் ஒன்றையும் வடிவமைக்கவுள்ளதாக நேற்று மட்டக்களப்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் கூறியுள்ளார்.
கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர நேற்று(12) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன் வளர்ப்பு திட்டங்களை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என கலந்துரையாடியதாக கூறியுள்ளார்.