தென்னிலங்கையில் உள்ள இந்து ஆலயத்தின் மீது கண்வைத்தது அரசு
காலி - உனவட்டுன பிள்ளையார் கோவிலில் உள்ள 300 வருட பழைமை வாய்ந்த தேர் மற்றும் கோவிலை பாதுகாப்புச் சின்னமாக வர்த்தமானியில் அறிவிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
இதற்காக, இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உள்ளிட்ட அமைச்சின் முக்கியஸ்தர்கள் இந்த ஆலயத்திற்குச் சென்று மேற்பார்வை செய்தனர்.
பின், இது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்கு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.