யாழ். திருநெல்வேலி பால்பண்ணை பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் மின்னிணைப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது நேற்று (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சிறுவன் தனியார் கட்டட ஒப்பந்ததாரர் ஒருவரின் கீழ் வேலைக்குச் சேர்ந்து மின்னிணைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
17 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்தியமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.