அரச ஊழியர்கள் கடமைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் மீள்பரிசீலனை

அனைத்து அரச ஊழியர்களையும்  இன்று(02) முதல் கடமைக்கு அழைக்க அரசாங்கம் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துளளது.

அரச ஊழியர்கள் உட்பட பொது  மக்கள் வழமை போல் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதனால் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவ கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவிக்கின்றார்.

தற்போழுது கொரோனா அதிகமாக பரவிவரும் நிலையில் அரசாங்கம் எடுத்த முடிவு  அரச ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பாரிய கஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
புதியது பழையவை